யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள KGF திரைப்படம்..!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள KGF (கோலார் தங்க வயல்) திரைப்படத்தின் பிரம்மாண்டமான ட்ரைலர் வெளியானது!

கன்னட திரையுலகில் பெரும் பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் KGF. மூன்று ஆண்டுகளாக திரைப்பட வேலைகள் நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது முதற்பாகத்திற்கான வெளியீடு நெருங்கியுள்ளது. பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள KGF திரைப்படம் கன்னட மொழியில் உருவான போதிலும், கன்னட பதிப்பில் வெளியாகும் அதே நாளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

வரும் டிசம்பர் மாதம் 21-ஆம் நாள் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். தமிழில் நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிளிம் பேக்ட்டரி நிறுவனம் இந்த திரைப்படத்தினை வெளியிடுகின்றனர்.

3 நிமிட அளவில் வெளியாகியுள்ள இந்த KGF ட்ரைலர், சத்தமில்லாமல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தின் பெரும் ஒலியினை ஏற்படுத்தியுள்ளது. ஒரு போர்களத்தினை கண்முன் கொண்டுவந்துள்ள இந்த ட்ரைலர், திரைப்படத்தின் மீதான ஆர்வத்தினை மேலும் தூண்டியுள்ளது.

பாம்பே தெரிவில் சுற்றி திரியும் சிறுவன், நாட்டின் மிகப்பெரிய சுரங்க இருப்பான கோலார் தங்க வயலின் தலைவனாவது படத்தின் திரைகதை என நமக்கு ட்ரைலர் உணர்த்துகிறது.

Leave a Response