விஸ்வாசத்திற்கு வழி விட்ட சூப்பர் ஸ்டார்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது, விஸ்வாசம் மட்டுமே சோலோவாக வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பலர்.

இவர்களது படங்கள் ஒரே நாளில் மோதி கொண்டால் நிச்சயம் அது இரண்டு படத்தின் வசூலுக்கு பாதகமாக தான் அமையும். தீபாவளி ரேஸிலும் தளபதி விஜயின் சர்கார், தல அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் NGK ஆகிய படங்கள் மோத இருந்தன.

பின்னர் சர்கார் மட்டுமே திரைக்கு வந்தது. விஸ்வாசம் பொங்கலுக்கு தள்ளி போனது. அதன் பின்னர் போன்களில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2 பாயிண்ட் ஓ படம் நவம்பர் 29-ல் திரைக்கு வர உள்ளது.

அதனை தொடர்ந்து வெறும் 45 நாட்கள் இடைவெளியிலேயே அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Response