ஓடும் ரயிலிலிருந்து குதித்த மிஸ்கின்!

Mysskin Train jump 5 (4209 x 1982)

‘Lone wolf’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்துக்குக்கு இயக்குனர் மிஷ்கின் இயக்கி, நடித்து வரும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. “வழக்கு எண்” படத்தில் நடித்த ஸ்ரீ ஆட்டுக்குட்டியின் குணம் கொண்ட ஒருக் கதாபாத்திரத்திலும், மிஷ்கின் ஓநாயின் குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

‘நந்தலாலா’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மனதைக் கவர்ந்த  மிஷ்கின் இந்த படத்திலும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். எதற்கும் அஞ்சாத, வெளிப்படையாக பேசும் மிஸ்கின் இந்த படத்தில் சாகசம் ஒன்றை புரிந்துள்ளார்.

இவர் ஓடும் ரயிலிலிருந்து வெளியே குதிக்கும் காட்சி பார்ப்போரை கதிகலங்கவும் உறைய  வைத்துள்ளது. இப்படத்தின் சண்டைப்பயிற்சியாளர் ‘பில்லா’ ஜகன் இது பற்றி கூறுகையில், ”ரயில் வேகம் காரணமாகவும் அதன்  தண்டவாளத்தை ஒட்டிநிறைய தூண்களும் கம்பங்களும் இருந்ததால் இக்காட்சியை டூப் வைத்து செய்து விடலாம் என நினைத்தேன்.

ஆனால் மிஷ்கினோ ‘தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் இதை நான் தான் பண்ணுவேன்’ என பிடிவாதமாக கூறிவிட்டார். அவருக்கு டூப் போடுவதிலும், சட்டைக்கு பின் கயிறு பயன்படுத்துவதிலும், கிரீன் மேட்டிலோ, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாகவோ இதனை எடுப்பதில் உடன்பாடில்லை. இது மட்டுமில்லாமல் எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் ‘டேக்’குக்கு போய்விட்டார்.

முதல் டேக் திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் ஒரே டேக் எடுத்து இந்த காட்சியை வெற்றிகரமாக எடுத்து முடித்தார். இந்த காட்சி மிக சிறப்பாக வந்துள்ளது. மிஷ்கின் அவர்களது உழைப்பை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரது துணிச்சலுக்கும் அர்பணிப்புக்கும் நான் தலை வணங்குகிறேன். இவருடன் பணி புரிவதை நான் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என்பதில் எந்த அளவும் எனக்கு சந்தேகம் இல்லை” என்றார்.