விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு – எஸ் ஏ சந்திரசேகர் அதிரடி பேச்சு..!

விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்று அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்துக்கு மக்கள் இயக்கம் என பெயர் சூட்டி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் அவரது சினிமா வசனங்களும் கதைக்கருவும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வண்ணமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சர்கார் பட இசை விழாவில் அவர் அரசியல் குறித்து பேசிய பேச்சு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் கவர்ந்தது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு குட்டி கதையை விஜய் கூறியிருந்தார்.

விஜய்யின் அரசியல் பேச்சை தமிழக அமைச்சர்கள் எதிர்த்தனர். இந்நிலையில் பாபநாசத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறுகையில் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன்.

விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள். மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் என்ன தவறு. என்னை ஆன்மிகவாதியாக மாற்றியது சத்குரு ஜக்கி வாசுதேவ்தான்.

பிறப்பாக கிறிஸ்தவராக இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றுகிறேன் என்று பேட்டி அளித்தார் எஸ்ஏசி. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த போது விஜய்யின் ஒரு கிறிஸ்துவர் என்பதை சுட்டிக் காட்ட அவரது வாக்காளர் அடையாள அட்டையை தோண்டி எடுத்தார் எச் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response