நானும் ரவுடிதான் என்பதை போல் ஸ்டாலின் செயல்படுகிறார் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!

நானும் ரவுடிதான் என்பதை போல் ஸ்டாலின் செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், திமுகவிற்கு அரசியல் பண்பாடும் நாகரீகமும் கிடையாது.

திமுக பதவி வெறியும் ஆதங்கத்தோடும் இருப்பது ஸ்டாலினின் செயல்பாட்டிலேயே தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் ஏதோ நானும் ரவுடிதான் என்ற அடிப்படையில் செயல்படுகிறார். திமுக ஆட்சியில்தான் பல்வேறு ஊழல்கள் நடந்தன என்ற வரலாற்று உண்மையை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஸ்டாலின் தனது குடும்பச் சொத்து என்ன என்பதை கூறுவாரா.

ஈழ தமிழர்கள் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்று ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அது விரைவில் நிறைவேறும். சினிமாவில் நல்ல கருத்துக்களை பரப்பும் வேலையை இயக்குனர்கள் செய்ய வேண்டும். கமலும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் சந்தித்ததால் எந்த மாற்றமும் வர ஏற்பட்டு விடாது.

எங்கள் அமைச்சர்கள் நாவடக்கத்துடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் திமுகவினர்தான் நாவடக்கம் இல்லாமல் பேசி வருகின்றனர் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

Leave a Response