அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க முடியவில்லை – தமிழிசை கிண்டல்..!

அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க கூட முடியவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க முடியவில்லை என்றார்.

மேலும் தமிழகத்தில் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

இடைத்தேர்தல்களில் போட்டியிட பாஜக விரும்புவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response