பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர கடிதம்..!

சென்னை தலைமைச் செயலகத்தில் குட்கா விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், குட்கா விவகாரம் குறித்தும், பெட்ரோல் விலை குறித்தும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்தும் ஆலோசிக்கப்படுவாதாக தகவல் வெளியாகியது.

இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வலியுறுத்தியம், மறைந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Response