”பேட்ட” வெளியானது ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் பட டைட்டில்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது. இப்படத்திற்கு பேட்ட எனப் பெயரிடப்பட்டுள்ளது.

காலா படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். காலா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், இந்த படத்தை அதிரடி மாஸ் படமாக எடுத்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் சென்னை புறநகரில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டடோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சரியாக 6 மணிக்கு இப்பட தலைப்பு வெளியானது. இப்படத்திற்கு ‘பேட்ட’ எனப் பெயரிடப்பட்டுள்ளதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Response