திருவாரூர் சென்ற ஸ்டாலின் : தொண்டர்கள் அமோக வரவேற்பு..!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது டெல்டா பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

காலையில் திருச்சி சென்ற அவர் ஆய்வு பணிகளை செய்தார். இந்த நிலையில், தற்போது அவர் திருவாரூர் சென்றுள்ளார்.

ஸ்டாலின் இன்று காலை திருவாரூர் வந்தார். திருவாரூரில் உள்ள கட்சி தலைவர்களுடன், நிர்வாகிகளுடன் உரையாடினார். அவர் திருவாரூர் செல்வது குறித்து பெரிய அளவில் வெளியே அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஸ்டாலின் திமுக தலைவரான பின், முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல்முறையாக ஸ்டாலின் திருவாரூர் வந்துள்ளார்.

இதனால் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் படை பெரிய அளவில் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். திருவாரூரில் கருணாநிதிக்கு நெருக்கமான நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். இன்று ஸ்டாலின் கருணாநிதி பிறந்து வளர்ந்த வீட்டிற்கு செல்ல வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

அவர் இன்று திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். திருவாரூரில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. திருவாரூரில் எந்த வேட்பாளரை இடைத்தேர்தலில் நிற்க வைக்கலாம் என்று ஸ்டாலின் இந்த சந்திப்பில் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது.

ஏற்கனவே திருவாரூர் தேர்தலுக்காக டிடிவி தினகரன் தரப்பு தீவிரமாக தயாராகி வருகிறது. அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மன்னார்குடி கூட்டத்திற்கு பின் அதிமுக தரப்பும் இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரமாக களமிறங்கி உள்ளது. தற்போது ஸ்டாலின் சந்திப்பை தொடர்ந்து இன்னும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

 

Leave a Response