தேர்தலை திசை திருப்பும் வல்லமை மிக்கவர் மு.க.அழகிரி: பொன்ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு..!

மு.க.அழகிரியை பாஜக தூண்டிவிட்டு திமுகவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘ தேர்தல்களை திசை திருப்பும் வல்லமை மிக்கவர் மு.க.அழகிரி என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

திமுகவின் எதிர்காலம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘மு.க.அழகிரி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகன். தி.மு.க. வளர்ச்சியில் அதிகம் பங்காற்றியவர். பல இடைத்தேர்தல், பொதுத் தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றி பெற செய்தவர். தேர்தலை திசை திருப்பும் வல்லமை மிக்கவர் மு.க.அழகிரி. தி.மு.க.வினர் இதனை கவனிப்பார்கள்.

மு.க.ஸ்டாலின் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக இருந்தவர். கனிமொழி எம்.பி.யாக திறம்பட செயல்படுகிறார். ஆகவே தி.மு.க.வில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு எடுப்பார்கள். எந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு கிடையாது என்று கூறியுள்ளார்.

Leave a Response