ஜோடியாக முதல் பாடலை பாடிய செந்தில்கணேஷ்-ராஜலஷ்மி..!

சூப்பர் சிங்கர் சீசன் 6ன் வெற்றியாளரான செந்தில் கணேஷுக்கு சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் இமான் வாய்ப்பை உறுதிசெய்துவிட்டார். போட்டியில் வெற்றி பெற்றவர் ரகுமானின் இசையில் பாடுவதும் உறுதியாகிவிட்ட நிலையில், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முதல் பாடலை பிரபுதேவாவிற்காக சார்லி சாப்ளின் 2 படத்திற்காக பாடியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காளி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்த சார்ளி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தை அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி மற்றும் அதா சர்மா நடிக்கிறார்கள்.

இவர்களுடன சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ், கோலிசோடா சீதா, தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் டி.சிவா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சக்தி சிதம்பரம் இயக்கும் இப்படத்திற்கு செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். சசி படத்தொகுப்பு செய்கிறார். அம்ரிஷ் இசையமைக்கிறார். முதல் பாகம் மாதிரியே கலகலப்பான நகைச்சுவை படமாக தயாராகிறது.

இப்படத்தில் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக “சின்ன மச்சான் செவத்த மச்சான்…சின்ன புள்ள செவத்த புள்ள ” என்ற பாடலை அம்ரீஷ் இசையில் பாடியுள்ளனர்.

இந்த பாடல் செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம் நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான கிராமிய பாடலாகும். அதே பாடலை இப்போது அவர்கள் சினிமாவில் ஜோடியாக பாடியுள்ளனர்.

இந்த பாடல் காட்சியில் பிரபுதேவா நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப்ப்பட்டுள்ள நிலையில் விரைவில் இசை வெளியீடு நடைபெறும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Leave a Response