“ஸ்டாலின் சொல்றது வேடிக்கையா இருக்கு…” செல்லூர் ராஜூ செம்ம கலாய்..!

பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிப்போம் என்பது வேடிக்கையாக உள்ளது என திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு.

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஆழ்துளை குடிநீர்குழாய் சேதமடைந்தததை ஆய்வு மேற்கொண்ட பிறகுசெய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அதிமுகவிடம் அமித்ஷா ஆதரவு கேட்டு கொண்டதற்கு இணங்க தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து ஆலோசித்து ஆதரவு அளித்துள்ளனர்.

மேலும் திமுக வை பொறுத்தவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிப்போம் என்பது வேடிக்கையாக உள்ளது.,

ஊழல் குற்றச்சாட்டு குறித்த அமித்ஷா அவர்களின் கருத்து தமிழகத்தை பொதுவாக தான் கூறினார் அதிமுக என்று குறிப்பிட்டு கூறவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் கட்டிப்பிடித்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ராகுல் இந்தியாவில் வளர்ந்து வரக்கூடிய ஒரு இளம் தலைவர் அவர்,தனது தந்தையை போல மிக எளிமையாக பழகுவார் என்றார்.

மேலும் பேசிய அவர்,சென்னையில் ராகுல் ஜெயலலிதாவை சந்திக்க வந்த போது நான் பேசி இருக்கிறேன். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மீதான நாடாளுமன்ற கூட்ட விவாதத்தின் போது ராகுல் ஜி நடந்து கொண்ட விதம் அரசியல் நாகரீகமான ஒன்று என்று தெரிவித்தார்.

Leave a Response