ஜியாகான் மறைவிற்கு முருகதாஸ் இரங்கல்!

jiah_khan05_10x71

பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் ஜியாகான். 25 வயதே ஆன அவர் கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நிஷப்த் படத்திலும் நடித்துள்ளார். இங்கிலாந்தில் வளர்ந்த அவர் அண்மையில் தான் தனது தாயுடன் மும்பை ஜுஹு பகுதியில் செட்டிலானார்.

படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது புதிய வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தாராம். சமீபகாலமாக சொந்த பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நேற்று இரவு 11 மணிக்கு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் சாகும் முன்பு கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இறந்தது பற்றி முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில், “ஜியாகான் இறந்த செய்தி அறிந்து மிகுந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். அவர் இப்போது நம்முடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.