சூப்பர்குட் பிலிம்ஸ்-ன் இரண்டு தூண்கள் K.S.ரவிக்குமார் & விக்ரமன் – R.B.சௌத்திரி!

ninai

அபிஷேக் பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக  ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து தயாரிக்க விக்ரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நினைத்தது யாரோ. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டு இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினர்.

தயாரிப்பாளர்களுக்கு பிடித்த இயக்குனர் விக்ரமன். வழக்கமாக தயாரிப்பாளர்கள் தான் இயக்குனர்களிடம் படத்தில் இந்த காட்சி எடுப்பதற்கு செலவு அதிகமாகும் வேண்டாம் என்று கூறுவார்கள் ஆனால் இயக்குனர் விக்ரமன் இந்த காட்சி வேண்டாம் செலவை குறைத்துக் கொள்வோம் என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை கூறுவார் என்று AVM.சரவணன் பாராட்டினார்.

சூப்பர்குட் பிலிம்ஸ் இன் இரண்டு தூண்கள் K.S.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இந்த இரண்டு இயக்குனர்களும் பல வெற்றிப்படங்களை கொடுத்ததால் தான் நல்ல படங்களை தயாரித்தேன் மற்றும் புது இயக்குனர்களுக்கு படம் தயாரித்தேன் என்று R.B.சௌத்திரி பாராட்டினார்.

நான் ஒருமுறை விக்ரமனுடன் படம் பண்ண அட்வான்ஸ் கொடுத்திருந்தேன் அட்வான்ஸ் கொடுத்து சில நாட்களுக்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனராக வளர்ந்துவிட்டார் எனவே அவரை வைத்து படம் பன்ன என்னால் முடியவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து அவர் என்னை அழைத்து நான் கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டார் எனக்கு தெரிந்து படத்திற்கு வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்த முதலும் கடைசியுமான இயக்குனர் இவர்தான் என்று விக்ரமனை பிரமீட் நடராஜன் பாராட்டினார்.

எந்த இயக்குனரும் தயாரிப்பாளர்களிடம் போய் எனக்கு படம் கொடுங்கள் என்று கேட்பதில்லை. தயாரிப்பாளர்கள் அவர்களாக தான் அட்வான்ஸ் கொடுத்து படம் பண்ண சொல்கிறார்கள். அந்த இயக்குனர் அப்போது பண்ணி கொண்டிருந்த படம் ஓடவில்லை என்றால் கொடுத்த அட்வான்சை திருப்பி கேட்கிறார்கள். நாங்கள் பணத்தை குடும்பம் குழந்தைகளுக்கு செலவு செய்த பிறகு பணத்தை கேட்டால் நாங்கள் எப்படி திருப்பி தரமுடியும் படம்தான் பண்ணி தர முடியும் என்று பாரதிராஜா கூறினார்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும்  இயக்குனர் விக்ரமன் வரவேற்று பேசினார். தயாரிப்பாளர்கள் ரமேஷ், இமானுவேல் ஆகியோர் நன்றி கூறினர்.