உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி..!

நொய்டாவின் செக்டார் 81 பகுதியில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை இன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.

மேலும் இந்த விழாவில் தென்கொரிய அதிபல் மூன் ஜே-வும் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜபோன் நிறுவனத்திற்கு சாவல் விடும் வகையில் இந்த உலகிலேய மிகப்பெரிய தொழில்சாலை துவங்கப்படகிறது. இதற்குவேண்டி 35 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையை பிரதமர் மோடி மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோ ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனம் இது தொடர்பாக தெரிவித்தது என்னவென்றால், தனது தொழிற்சாலை திட்ட விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.4,915 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியா அதிநவீன ஸ்மார்ட்போன்களை தயார் செய்ய முடிவுசெய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

இதுவரை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 67 மில்லியன் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வந்தது, புதிய தொழிற்சாலை செயல்படத் தொடங்கினால், இந்த எண்ணக்கை 120மில்லியன் மொபைல் போன்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஃபிரட்ஜ், டிவி போன்ற பல்வேறு சாதனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்திய சந்தையில் சாம்சங் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி எஸ்10 ஸ்மாரட்போனை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் வழங்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் சாதனத்தில் 12 எம்பி டூயல் அப்ரேச்சர் லென்ஸ், 16 எம்பி (f/1.9) மற்றும் 13 எம்பி (f2.4) லென்ஸ் வசதி இடம்பெற்றுள்ளது என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. குறிப்பாக வைடு-ஆங்கில் லென்ஸ்-இல் ஆட்டோஃபோக்கஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response