ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு..!

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

இதனை தடுக்க முயன்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே மாதம் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்கு வழங்கப்படும் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவற்றின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லை ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Response