தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் NGK படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இது சூர்யாவிற்கு 37-வது படமாகும். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடிக்கிறார். இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி, சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.