சென்னை மோனோ ரயில் திட்டம் நிறுத்தி வைப்பு-சட்டசபையில் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு..!

சென்னையில் தொடங்கப்பட இருந்த மோனோ ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் மோனோ ரயில். சென்னையில் மெட்ரோ ரயில் இருந்தாலும் மோனோ ரயிலையும் கொண்டு வர வேண்டும் என்று எண்ணத்தில் இருந்தார். ஆனால் உலகில் மோனோ ரயில் எங்குமே பெரிய அளவில் வெற்றி பெற வில்லை.

மோனோ ரயில் ஓடும் சில இடங்களில் கூட மிகவும் அதிக நஷ்டத்தில் ஓடுகிறது.இதனால் சென்னைக்கு யோனி ரயிலை விட மெட்ரோ ரயில்தான் சிறந்தது என்று கூறப்பட்டதால், மோனோ ரயிலை அப்போது ஜெயலலிதா அறிமுகப்படுத்தாமல் இருந்தார்.

இந்த நிலையில் இன்று சட்டசபையில் சென்னையில் செயல்படுத்தப்பட இருந்த மோனோ ரயில் திட்டம் குறித்து திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யா மொழி கேள்வி எழுப்பினார். இதற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி பதிலளித்தார்.

அதில், சென்னையில் தொடங்கப்பட இருந்த மோனோ ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, தான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில், சென்னையில் சாலைகள் இகவும் குறுகலாக உள்ளதால் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்து கடினம். ஆனால் இதற்காக திட்டமிடல் நடந்து வருகிறது.

ஆனால் இதற்கான டெண்டர் எடுக்க கூட யாரும் முன்வரவில்லை.மெட்ரோ ரயில் பணி நீட்டிப்பு காரணமாக மோனோ ரயிலின் அவசியம் குறைந்துள்ளது, மோனோ ரயில் திட்டம் கொள்கை ரீதியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மோனோ ரயில் திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை என்றுள்ளார்.

Leave a Response