எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க வேண்டியதில்லை: ஸ்டாலின்..!

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க வேண்டியதில்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

தற்போது 18 எம்எல்ஏக்கள் வழக்கு மீண்டும் முதலில் இருந்து தொடங்கியுள்ளது. இதில் வரும் தீர்ப்பை பொறுத்தே தமிழக அரசியலில் அடுத்தடுத்த மாற்றம் நடக்கும். இந்த நிலையில் இந்த வழக்கும் குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்று பேசினார்.

திருச்சியில் திமுக சிறுபான்மையினர் அணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசியது ஸ்டாலின், 18 எம்எல்ஏக்களின் வழக்கில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க போவாதாக கூறினார்.

அதில், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை திமுக காத்திருக்கும். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை.

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க வேண்டியதில்லை.அப்படி செய்தால் திமுக மீது மக்கள் வைத்துள்ள மரியாதை போய்விடும். வழக்கில் தீர்ப்பு என்ன வருகிறது என்று பார்க்கலாம். அதற்கு பின் திமுக அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றுள்ளார்.

Leave a Response