தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் பாராட்டுக்கு உரியது-முதல்வர் பழனிசாமி..!

திருச்சியில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் பாராட்டுக்கு உரியது என்றார்.

தங்க தமிழ்செல்வனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு அமைச்சர் பதவி வழங்கப்படுமென முதல்வர் பதில் அளித்தார்.

காவிரி நீரை பெறுவது குறித்து மத்திய நீர்வள அமைச்சரிடம் பேசுயுள்ளேன். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசு உறுப்பினர்களை நியமிக்கவில்லை என்றவர் காவிரி மேலாண்மை ஆணையத்தை விரைவாக கூட்டி தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

மேலும், மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் வந்தவுடன், அணையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Response