இந்த ஆட்சியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது-மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

தூத்துக்குடியில் நடந்ததுபோல சேலம் போராட்டம் மாறிவிடக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதனால் 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் என்றார். இது குறித்து முதலமைச்ச்ர எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சென்னை – சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி என முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பேசும்போது தூத்துக்குடி என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இது குறித்த திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் மறுத்தார்.

இதை அடுத்து, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர், மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பசுமை சாலைதிட்டம் தொடர்பான விவாதம் சட்டமன்றத்துக்கு வந்தபோது, நான் குறுக்கிட்டு சாலை திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயம் தேவை. அதனை திமுகவரவேற்கிறது.

அதே நேரத்தில் மக்களுக்கு என்ன பாதிப்பு என்பதை அவர்களிடம் கேட்டு தீர்வு காண வேண்டும். மக்கள் குறை தீர்ப்பு அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றேன். மலைகள், விவசாய நிலங்கள் பாதிக்கக் கூடிய நிலையில் உள்ளது. சேலம் மக்கள் போராடும் சூழலுக்கு வந்துள்ளன. இப்போதுதான் தூத்துக்குடி சம்பவம் முடிநதுள்ளது. அதுபோல போராட்டம் வந்துவிடக் கூடாது. மக்களிடத்தில் விருப்பத்தைக் கேட்டு அதன்பிறகே கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்என்று என் கருத்தை தெரிவித்தேன்.

தூத்துக்குடி என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். அது என்ன தீண்ட தகாத வார்த்தையா? தூத்துக்குடி என்றவார்த்தையை முதலமைச்சர் பல முறை பேசியுள்ளார். அது பதிவாகியுள்ளது. நான் சொன்னது பதிவாகக் கூடாதா? என்றேன். ஆனால் கடைசி வரை எங்கள்கோரிக்கையை ஏற்கவில்லை.

இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதிலுறையை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார். கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் நசுக்கப்பட்டு வருகிறது. அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள. இதுவே இந்த ஆட்சியின் சர்வாதிகார போக்கிற்குசாட்சி என்று ஸ்டாலின் கூறினார்.

Leave a Response