ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெயலலிதா தான் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்ட சபை நடைபெற்று வருகிறது. இந்த போட்டி சட்ட சபையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அதிமுக ஆதரவு எம்எல்ஏ. கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டி சட்டசபையில் பேசிய ஸ்டாலின் தமிழக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். அவர், பேசியதாவது, சொந்த மக்களையே சுட்டுக் கொல்லும் அரசாக தமிழக அரசு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெயலலிதா தான். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது அதிமுக அரசு தான்.
ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை என சான்றிதழ் கொடுத்ததும் அதிமுகதான். அமைதி பேரணியையை கலவரமாக்கியது தமிழக அரசு. திமுகவுக்கு ஜனநாயக போராட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது.
துப்பாக்கிச்சூடுக்கு அனுமதி கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமிதான். 13 உயிர்கள் பறிபோக காரணமானவரும் எடப்பாடி பழனிச்சாமிதான்.
திமுக மீது வீண் பழி சுமத்துகிறது அதிமுக அரசு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசின் நோக்கம் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான். இவ்வாறு ஸ்டாலின் மாதிரி சட்டசபையில் பேசினார்.