சட்டமன்ற கூட்டத்தொடரை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறேன்-கோபமாக வெளியேறிய கருணாஸ்..!

முதல் நாள் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று கூடியுள்ள நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தமிமூன் அன்சாரி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் புகைப்படம் கொண்ட சின்ன பேனரை கையில் பதாகை போல் தூக்கி வந்தார். எதிர்கட்சிகளின் சட்டமன்ற வருகையே தடாலடியாக இருந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்தார் முதல்வர்.

முதல்வர் தாக்கல் செய்த ஐந்து பக்க விவர அறிக்கையில் ’துப்பாக்கி சூடு’ என்கிற வார்த்தை அறிக்கையில் இடம்பெறவே இல்லை. மாறாக காவல்துறையின் நடவடிக்கை என்றே குறிப்பிட்டுள்ளார். இதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையோ அல்லது காயமுற்றவர்களின் எண்ணிக்கையோ குறிப்பிடவில்லை.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து அவையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளியேறினர். இதில் முக்குலத்தோர் புலிகள் கட்சியின் தலைவரான எம்.எல்.ஏ கருணாஸ் பேசிய போது அமைதியான முறையில் போராடிய மக்களின் இறப்பை கொச்சைப்படுத்தும் விதமாக நடந்த துப்பாக்கி சூட்டை கூட குறிப்பிடாமல் ஒருமையில் எம்.எல்.ஏக்களை பேசும் இந்த மனிதாபமனமற்ற இந்த சட்டமன்ற கூட்டத்தொடரை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறேன் என புறக்கணித்து வெளியேறினார்.

மக்களை இந்த அரசு சிட்டுக்குருவிகளை கொல்வது போல் கொன்று குவித்துள்ளது. இதற்கு சரியான விளக்கமளிக்காமல் இறந்ந்தவர்களையோ காயமடைந்தவர்களையோ குறிப்பிடாத அறிக்கையை முதல்வர் வாசித்தார். என குற்றஞ்சாட்டினார். தனியொரு சட்டமன்ற உறுப்பினராக கேள்வி கேட்கும் உரிமையையும் அளிக்காத சட்டமன்றத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.

Leave a Response