அம்மா இருந்திருந்தால் இந்தப் போராட்டத்தை இப்படி கையாண்டிருப்பார்களா-டிடிவி தினகரன்..!

நடைபெறும் மோசமான ஆட்சிக்கு பொறுப்பேற்றும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமாகவும் இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தப் போவதாக டி.டி.வி தினகரன் தெரிவித்தார்

முதல் நாள் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று கூடியுள்ள் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். எதிர்கட்சிகளின் சட்டமன்ற வருகையே தடாலடியாக இருந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்தார் முதல்வர்.

முதல்வர் தாக்கல் செய்த ஐந்து பக்க விவர அறிக்கையில் ’துப்பாக்கி சூடு’ என்கிற வார்த்தை அறிக்கையில் இடம்பெறவே இல்லை. மாறாக காவல்துறையின் நடவடிக்கை என்றே குறிப்பிட்டுள்ளார். இதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையோ அல்லது காயமுற்றவர்களின் எண்ணிக்கையோ குறிப்பிடவில்லை.

மேலும் போராட்டத்தில் சிலகட்சிகள் ஊடுருவினர் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக சமூகவிரோத செயல்களை செய்தனர் எனக்கூறினார். சில கட்சியென யாரை குறிப்பிடுகிறீர்கள் என தான் கேள்வி எழுப்பியதாக தினகரன் கூறினார். சட்டமன்றத்தில் யார் ஒருவரையும் ஒருமையில் அழைக்க்க்கூடாது என்கிற அடிப்படை கூட இல்லாமல் ஒருமையில் பேசிவிட்டு அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோருகின்றனர்.

அம்மாவின் ஆட்சியென பேச்சுக்கு பேச்சு சொல்லும் எடப்பாடி அம்மா இருந்திருந்தால் இந்தப் போராட்டத்தை இப்படி கையாண்டிருப்பார்களா? என கேள்வியெழுப்பினார். மேலும் எடப்பாடி அரசு மக்களை கொன்று குவித்து விட்டு வெட்கம் மானம் இருந்தால் இன்னும் ஆட்சியிலிருப்பார்களா என தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார் தினகரன்.

Leave a Response