தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு : சிபிசிஐடி-க்கு மாற்றம்..!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

துாத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக மே 22ல் நடந்த நுாறாவது நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 வயது சிறுமி, 19 வயது கல்லூரி மாணவர் உள்பட 13 பேர் பலியாகினர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை தூத்துக்குடி போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் தூப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response