காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் ஒப்புக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன்..!

கர்நாடக தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டது. பிரதமர் கர்நாடாக தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பதால் காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து இதுதொடர்பான வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம். கர்நாடக தேர்தலுக்காக உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டோம்.

இதுபோன்ற அரசியலை அனைத்து கட்சிகளும் செய்கிறது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலுக்காக அவகாசம் கேட்டோம், அரசியல் செய்தோம் என தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response