முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம் !

முதுமலையில் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முதுமலை, தெப்பக்காடு உள்ளிட்ட 4 வனசரகங்களில் உள்ள 37 வழித்தடங்களில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 6 நாட்கள் நடைபெற உள்ள இந்த பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 108 பேர் பங்கேற்றுள்ளனர்.

நேரடி காட்சிகள், கால்தடம், எச்சம், மரங்களில் உள்ள கீரல்கள் ஆகியவற்றை கொண்டு வனவிலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர். இன்று நடைபெறும் முதற்கட்ட கணக்கெடுப்பை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக வரும் 19ம் தேதி 24 வரை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

பணிகள் முடிவடைந்தவுடன் இறுதியாக அனைத்து தகவல்களும் ஒன்றிணைக்கப்பட்டு தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆவணமாக அனுப்பப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response