பட்டிமன்ற நடுவரும் பேராசிரியரான தமிழறிஞர் அறிவொளி இன்று காலமானார் !

நாகை மாவட்டம் சிக்கலை சேர்ந்தவர் தமிழறிஞர் அறிவொளி (80). இவர் 1986ல் வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு திருச்சி மருத்துவமனையில் தமிழறிஞர் அறிவொளியின் உயிர் பிரிந்தது.

120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் அறிவொளி. பட்டிமன்ற நடுவராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். ஆன்மிக இலக்கிய சொற்பொழிவாளரும் ஆவார்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் அறிவொளி.

Leave a Response