காதல் கந்தாஸ் நம்பிக்கை துரோகி-கொந்தளிக்கும் “அக்ஷயா”..!

ஆரியா நடித்த கலாபக்காதலன், விஜயகாந்த் நடித்த  “ எங்கள் ஆசான், உளியின் ஓசை, போன்ற படங்களில் நடித்தவர் அக்ஷயா. தற்போது இயக்குனராகவும் களம் இறங்கியுள்ளார்.

தான் இயக்குனர் ஆவதற்கு முன்பு பல தடைகளை தாண்டவேண்டியிருந்தது பல ஏமாற்றங்களையும், துரோகங்களையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வர முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்:

சினிமா துறையில் வரும்போது பல நண்பர்கள் கிடைத்தனர் அப்படி கிடைத்தவர் தான் காதல் கந்தாஸ். ஆரம்பத்தில் நல்ல நண்பராக பல ஆலோசனைகள் கொடுத்தார். ஒரு கதை என்னிடம் இருக்கிறது அதை படமாக எடுக்கப்போகிறேன் என்றதும் யாருக்கோ இயக்குவதற்கு வாய்ப்பு தருவதற்கு பதில் எனக்கே தரலாமே என்று என்னிடம் கேட்டார். அதன் அடிப்படையில்தான் ‘யாளி’ படத்தை நாங்கள் தொடங்கினோம்.

கதை என்னுடையது என்றாலும் அவரது ஆலேசனையின்படி கேமராமேன், மேனேஜர் உட்பட சில முக்கிய நபர்களை படக்குழுவில் இணைத்துக் கொண்டோம்.

சென்னையில் இருக்கிறவரை காதல் கந்தாஸ் கேரக்டர் எதுவும் எனக்கு தவறாக தெரியவில்லை. நாங்கள் மலேசியாவுக்கு படப்பிடிபப்புக்கு போனதும் மறுநாளே தன் சுயரூபத்தை காட்டத் தொடங்கிவிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் டாமினேஷன் அதோடு, என் கதையை விட்டு விட்டு ஏதோ வேறு கதையை எடுக்கத் தொடங்கினார். சின்ன ரோலுக்கு என்று அழைத்து வந்த பெண்ணை இரண்டாவது கதாநாயகி என்று கதையை மாற்ற ஆரம்பித்தார்.

சில நாட்களிலேயே கந்தாசின் நம்பிக்கை துரோகம் வெளியில் தெரிய ஆரம்பித்ததும், எனக்கு தெரிந்து விட்டது என்பதால் மேனேஜர் மூலமாக என்னை மிரட்டும் செயலிலும் இறங்கினார்.படத்தின் கதை என்னுடையது, அவருக்கு சம்பளம் கொடுத்திருக்கிறேன், படத்தின் தயாரிப்பாளர் என் கணவர், என்னுடனேயே என் அம்மாவும் இருந்தார். இப்படியிருந்தும் நண்பராக வந்த காதல் கந்தாசின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமானதோடு ஒரு கட்டத்தில் படத்தில் இருந்து விலகிவிடுவேன் என்று மிரட்டினார்.

நானும் ரொம்ப நல்லதாக போய்விட்டது தாராளமாக வெளியே சென்று விடுங்கள் நீங்கள் போனாலும் நான் படத்தை எடுத்து முடித்துதான் திரும்புவேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன்.

பல மிரட்டல் உருட்டல்களை எதிர் கொண்டு காதல் கந்தாசிடம் இருந்து ‘இனி இந்த படத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனக்கு சேர வேண்டிய சம்பளம் அனைத்தும் பெற்றுக் கொண்டேன்’ என எழுதி வாங்கிக் கொண்டேன்.

இறைவன் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவள் நான் யாருக்கும் தீங்கு நினைத்தது இல்லை. அதனால், அந்த சூழலிலும் என் குழு எனக்கு நம்பிக்கையாக கூடவே இருந்து படத்தை முடிக்க உதவி செய்தது. அதேபோல என் கணவர், என் அம்மா இருவரும் மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார்கள்.
இனி இந்த படம் தொடர்பாக ஏதாவது சிக்கல் செய்ய நினைத்தால் காதல் கந்தாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கக்கூட நான் தயங்கமாட்டேன்.

யாளி படம் இப்போது டப்பிங் பணிகள் முடிந்து கிராபிக்ஸ் பணிகளில் தீவிரமாக உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என்கிறார் நடிகையும் இயக்குனருமான அக்ஷயா.

Leave a Response