பெண்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டேன்-நடிகர் தமன்..!

கலாபக்காதலன் படத்தில் நடித்த அக்‌ஷயா, மீண்டும் நாயகியாக நடித்துள்ள படம் யாளி. கணவர் பாலச்சந்தர்.டி. தயாரித்துள்ள இப்படத்தை அக்‌ஷயாவே இயக்கியுள்ளார். நடிகர் தமன் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.இவர் சட்டம் ஒரு இருட்டறை, சேதுபூமி போன்ற திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் மட்டும் அல்ல எந்த துறையாக இருந்தாலும் ஒரு பெண் அதில் வெற்றி பெறுவது என்பது ரொம்பவே பெரிய விஷயம். பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கொள்கிறார்கள் என்பதை யாளி படம் மூலம் புரிந்துக்கொண்டேன் என நடிகர் தமன் தெரிவித்துள்ளார்.

“சினிமாவில் மட்டும் அல்ல எந்த துறையாக இருந்தாலும் ஒரு பெண் அதில் வெற்றி பெறுவது என்பது ரொம்பவே பெரிய விஷயம். என் அம்மா ஆசிரியையாக இருந்தவர். ஆனால், அவரை வீட்டில் நாங்கள் சாதாரணமாகத் தான் பார்ப்போம். ஆனால், இப்படத்தில் நடித்தபோதுதான், பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கொள்கிறார்கள், என்பதை அக்‌ஷயாவைப் பார்த்து, நான் புரிந்துக்கொண்டேன். அக்‌ஷயா இந்த படத்திற்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். நிச்சயம் அவர் நடிகையாக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றி பெறுவார்” என்றார்.

மேலும், யாளி படம் பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் படம் என்றும்,  அவர் தெரிவித்தார்.

இவர் தற்போது இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் ‘நேத்ரா’ படத்தில் நடித்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2014 இல் திரையுலகில் கால் வைத்தார். வரும் செப்டம்பர் 12ஆம் தேதி இவருக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response