நீட் தேர்வு நிரந்தரமாக விலக்கு கோரி கடலூரில் இன்று கண்டன ஆர்பாட்டம்- சீமான், பாரதிராஜா, அமீர் பங்கேற்பு..!

நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் கடலூரில் இன்று நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்ககோரியும் , காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தொடர்ந்து தாமதப்படுத்தியும் வரும் மத்திய அரசைக் கண்டித்து இன்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இயக்குநர் வ.கெளதமன் ஒருங்கிணைத்துள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் பேராசிரியர் த.ஜெயராமன், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, வீ.சேகர், பேரரசு மற்றும் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன உரையாற்றவுள்ளார். மேலும், இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவு கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Response