நிர்மலா சீதாராமனுக்கு கருப்புக்கொடி காட்டியது கண்டிக்கத்தக்கது-தமிழிசை சௌந்தரராஜன்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கருப்புக்கொடி காட்டியது கண்டிக்கத்தக்கது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் நேற்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அப்போது நிர்மலா சீதாராமனின் கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவதுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன்,
காவிரி விவகாரத்தில் தவறை மறைக்கவே திமுக கருப்புக்கொடி காட்டுகிறது. அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்டியது கண்டிக்கத்தக்கது. தமிழகத்துக்கு பாஜக அரசு செய்ததை பட்டியலிட நான் தயார்; மு.க.ஸ்டாலின் தயாரா?. நிர்மலா சீதாராமனுக்கு தமிழக அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response