காவிரிக்காக விவசாயிகள் போராட்டம்:தஞ்சை தொடர் வண்டிநிலையம் முற்றுகை..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத்தின் சார்பாக தஞ்சை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த 300க்கும் மேற்பட்டோர் திறண்டனர்.

மத்திய அரசு காவிரி வாரியம் அமைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மேலும் ரயிலை மறிக்கவும் அவர்கள் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மாநில அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மத்திய அரசு செல்வதை கேட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். மத்திய அரசு காவிரி வாரியம் அமைக்காவிட்டால் மிக பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது மே 10-ஆம் தேதி முதல் காவல்துறை அனுமதி கொடுத்தாலும் இல்லாவிட்டாலும் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த போவதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response