தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்:மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்-சென்னை வானிலை மையம்..!

தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் நிலவி வருவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலில் ஏற்பட்ட இயற்கை மாற்றங்கள் மற்றும் தொலை தூர சலனங்களால் கடந்த 2 நாட்களாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

இதனால் மீனவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல்சீற்றம் நிலவி வருவதால் அலைகள் 2 மீட்டர் வரை இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Response