வைகோவை விரல் நீட்டிப் பேசும் தகுதி எச்.ராஜாவுக்கு இல்லை-நாஞ்சில் சம்பத்

தமிழ் இன விரோத போக்கை மட்டுமே வைத்து அரசியல் செய்யும் அற்பத்தனமாக எச்.ராஜாவுக்கு வைகோவை விரல் நீட்டி பேசும் தகுதி இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு பிரிவினைவாதி என்றும், அவரை சாகும்வரை சிறையில் தள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ள நாஞ்சில்வ சம்பத்,

பிரிவினை வாதத்தைத் தூண்டுவது என்,ராஜாதாள் என்றும், அவர் ஆபத்தானவன், குரூரமானவன், நயவஞ்சகன் என அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.

பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய் தத்தெடுத்த மகன்தான் வைகோ என்றும் அவரை அழைத்து வந்து சேது கமுத்திர திட்டத்தை தொடங்கி வைத்தவர் வைகோ என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

தமிழ்இன விரோதப் போக்கை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் அற்பத்தனமாகவன் எச். ராஜா என்றும், வைகோவை விரல் நீட்டிப் பேசும் தகுதி எச்.ராஜாவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வைகோ வெட்டி வீசி எறிகிற விரல் நகத்திற்கு விலை பேச முடியாத வெறிநாய் எச்.ராஜா என்றும் மிகக்கடுமையாக நாஞ்சில் சம்பத் விமர்சனம் செய்தார்.

Leave a Response