அதர்வா படத்தில் ‘ஐ’ பட வில்லன்..!

கௌதம் கார்த்திக் நடித்த ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கி தயாரித்த ஆர்.கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் ‘பூமராங்’.

அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பூமராங் படத்தில் அதர்வா வித்தியாசமான கெட்-அப்பில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தின் வில்லன் யார் எண்ட கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

ஷங்கரின் ‘ஐ’ பட வில்லன்களில் ஒருவராக நடித்த உபேன் பட்டேல் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்போது அந்த தகவலை ஆர்.கண்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

‘ஐ’ படத்தில் நடித்த உபேன் பட்டேல்தான் வில்லனாக நடிக்கிறார். அதர்வா, உபேன் பட்டேல் இருவரது பிட்னெஸ் மற்றும் இவர்கள் சம்பந்தப்பட்ட ஆகபஷன் காட்சிகள் ‘பூமராங்’ படத்தில் வேற லெவலில் இருக்கும்” என்று கூறியுள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

சினிமா ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டபோது இவருடைய கால்ஷீட்டுக்காகத்தான் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் சிறப்பு அனுமதி கேட்டார் ஆர்.கண்ணன்.

கவுன்சில் அனுமதி தரவில்லை. எனவே உபேன் பட்டேலிடம் நிலைமையை விளக்கி அடுத்த மாதம் முதல் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்.

Leave a Response