பிரபல இயக்குநருடன் கைகோர்த்த சந்தானம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டைரக்டர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவர் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அதிலும் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இறுதியாக சந்தானத்தின் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் வசூல் வேட்டையாடிதை தொடர்ந்து இவர் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் கண்ணன் தான் சூப்பர் ஹிட் படங்களான இவன் தந்திரம், பூமராங் ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக ஆர்.கண்ணன் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தியிருப்பார் சந்தானம். அதனால் மீண்டும் இருவரும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் படபிடிப்புகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளது.

Leave a Response