மார்ச் 01, 2018 முதல் தமிழ் திரைப்படங்கள் சம்மந்தமான எந்த நிகழ்வுகளோ, திரைப்பட ரிலீஸோ, படபிடிப்போ, பத்ரிகையாளர்கள் சந்திப்போ என எதிவுமே நடக்காமல் இருந்தது. காரணம் தயாரிப்பாளர்கள் சார்பாக அதன் சங்கம் வைத்த பல கோரிக்கைகளும் அது வரை திரைத்துறை வேலை நிறுத்தத்தில் இருக்கும் என்பதே.
அதில் முதலாவது திரையரங்கில் திரைப்படங்களை ஒளிப்பரபவும் கியூப் மற்றும் யூ.எப்.ஓ போன்ற டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்களின் கொள்ளை வாடகை. மற்றப்படி திரையரங்கில் படங்களுக்கு விற்கப்படும் டிக்கட்களின் அதிக விலை. திரையரங்கில் விற்கப்படும் டிக்கட்கள் விலை பற்றி தயாரிப்பாளர்களுக்கு வெளிப்படையான தகவல் தேவை என இன்னும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதில் முக்கிய கோரிக்கைகளான கியூப் மற்றும் யூ.எப்.ஓ பிரச்சனை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக 50% வரை குறைக்கப்பட்டுள்ளது. திரையரங்கு டிக்கட்கள் விலை ஜூலை மாதம் முதல் தயாரிப்பாளர்களுக்கு வெளிப்படையான தகவல் ஆன்லைன் மூலம் தெரிவிக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வாக்கு கொடுத்துள்ளனர். மற்ற சில பிரச்சனைகளும் சுமுகமாக முடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்ப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் வேலை நிறுத்தம் வாபஸ் பெருவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா நிகழ்வுகள் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
இதன் முதல் கட்டமாக, நடிகர்கள் கார்த்திக் மற்றும் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் மற்றும் ரெஜினா கசண்டரா நடிப்பில் திரு இயக்க ஜி.தனஞ்செயன் தயாரித்துவரும் “Mr.சந்திரமெளலி” திரைப்படத்தின் இசை வெளியீடு, ஸ்ட்ரைக்குப் பின் நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சியாகும்.
சத்யம் சினிமாஸ் திரையரங்கில் ஏப்ரல் 25 அன்று நடைபெறவிருக்கும் “Mr.சந்திரமெளலி” திரைப்படத்தின் இசை இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் குழுவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் பங்குபெறுகிறார்.