ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர்

மதுரையில் ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து          தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் அவரின் குடும்பத்தினர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் பதிவு செய்ததைக் கண்டித்தும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தியும் மதுரை, காளவாசல் சந்திப்பில் 30-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் ஹெச்.ராஜா உருவபொம்மையை வைத்து போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது திடீரென ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையைத்                தி.மு.க-வினர் எரித்தனர். காவல்துறையினர் தீயை அணைத்து அப்புறப்படுத்தினர். ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் ஏற்கெனவே பெரியாரை பற்றி அவதூறாகக் கருத்து வெளியிட்டதாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தற்போது கருணாநிதிக்கு எதிராக ஹெச்.ராஜா கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Leave a Response