அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் “வசந்த் ரவி” “மிஷ்கின்” இணையும் புதிய படம்..!

தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின்  பாராட்டுக்களையும் தரமான விருகளையும் வென்ற நடிகர்  வசந்த் ரவி தனது  அடுத்தபடத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார்.

RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் இயக்குனர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண்  மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக  நடிக்கின்றார்.

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிசுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது  குறிப்பிடத்தக்கது.அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில்தயாரிக்கப்படவுள்ளது.

இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வைகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான  காட்சிகளாக வெளிவரதினேஷ் சுப்பராயன் புதிய யுக்தியை  வடிவமைத்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர் நடிகையருக்கான விவரம்  விரைவில்அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

 

Leave a Response