போலீஸ் வாகனம் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் கைது

சமீபத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சீருடை அணிந்த காவலர்களை அடித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரலானது.

ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இதனை மறுத்தார். காவலர்களை தாக்கியது தனது கட்சியை சார்ந்தவர் இல்லை என்று சீமான் கூறினார் இந்த நிலையில் நேற்று சென்னை தி.நகர் பகுதியில் ரோந்து வாகனம் ஒன்றை சில மர்ம நபர்கள் கல்லால் தாக்கி சேதப்படுத்தினர்.

இந்த மர்ம நபர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது, ஒருவர் மட்டும் பிடிபட்டதாகவும், மீதி நான்குபேர் தப்பித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பிடிபட்ட நபரின் பெயர் கார்த்தி என்றும் இவரிடம் நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டை இருந்ததாகவும், அதுமட்டுமின்றி அவர் போதையில் இருந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார்த்தி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான 4 பேர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Response