விக்ரம் பிரபு படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்..!

ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரகுரு’ படத்தில் நாயகி மகிமா நம்பியார் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் ‘பக்கா’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விக்ரம் பிரபு தற்போது தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் ராஜ்தீப் இயக்கத்தில் ‘அசுரகுரு’ படத்திலும் விக்ரம் பிரபு நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க நடிகைகள் தேர்வு நடந்தது. முன்னணி கதாநாயகிகள் பலரும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆர்வம் காட்டிய நிலையில், மகிமா நம்பியார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த படத்தில் மகிமா காதல், டூயட் பாடும் வழக்கமான கதாநாயகியாக இல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மகிமா, ‘புல்லட்’ ஓட்டுதல், வில் வித்தை, மலை ஏற்றம் போன்ற பயிற்சிகளை கடந்த ஒரு மாத காலமாக மேற்கொண்டு வருகிறார்.

அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திகில் படமாக, ‘அசுரகுரு’ தயாராகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த், நாகிநீடு (தெலுங்கு) ஆகியோர் நடிக்கிறார்கள்.

திகில் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கிறார்.

Leave a Response