போலீசாரை தாக்கியது நாங்களல்ல, எங்கள் கட்சி வன்முறை கட்சியும் அல்ல-சீமான்

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை நாம் தமிழர் கட்சியினர் தாக்கவில்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை. எந்த அமைப்பு, எந்த கட்சி என்று தெரியாமல் நாம் தமிழர் கட்சி மீது குற்றம் சுமத்துவது தவறானது. போலீசார் தாக்கப்படுவதை தடுத்த என் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளார்கள்.

யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதை காவல்துறை தான் கண்டறிந்து நடடிவடிக்கை எடுக்க வேண்டும். நாம் திமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல. போலீசாரை நாம் தமிழர் கட்சியினர்தான் தாக்கியது என எப்படி முடிவு எடுத்தீர்கள். போலீசாரை தாக்குவதற்குத்தான் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா?.

ஜெயலலிதா இருந்தபோது வாரியம் என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம் தற்போது ஸ்கீம் என குறிப்பிடுகிறது. காவிரியில் எங்களுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பதை மத்திய அரசு கூற வேண்டும். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response