சிஎஸ்கே-விற்கு வந்த அடுத்த சோதனை-புனே மைதானத்திலும் எதிர்ப்பு..

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளை புனே மைதானத்தில் நடந்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்காக அம்மாநில அரசு வழக்கு தொடுத்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட வேண்டிய 14 போட்டிகளில் 2 போட்டிகளை ஆடி முடித்துள்ளது. இதில் ஒரு போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தை முன்னிட்டு, ஐபிஎல் போட்டிக்கும் எதிர்ப்பு நிலவியது. இதனால் சென்னையில் போட்டிகளை நடந்த கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. போட்டியின் போது நிறைய பாதுகாப்பு போடப்பட்டும் செருப்பு வீசுதல் போன்ற சம்பவங்கள் நடந்தது.

இதனால் மீதம் இருக்கும் 6 சென்னை போட்டிகள் கடைசியாக புனேவிற்கு மாற்றப்பட்டது. பல மாநிலங்கள் கவனத்தில்கொண்டுவரப்பட்டு, கடைசியாக புனேவிற்கு போட்டிகள் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் சிஎஸ்கேவின் போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அங்கு கடுமையான தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. தண்ணீர்ப் பிரச்சினையால் மைதானம் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போட்டி நடக்கும் சமயங்களில் மைதானத்தை பராமரிக்க நிறைய தண்ணீர் செலவு செய்ய வேண்டி இருக்கும். இதனால் ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடந்த எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா அரசு ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.

Leave a Response