தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்-கமல் ஹாசன்

‘’கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்.சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது’’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்றைய தனது டுவிட்டர் பதிவில், ‘’கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது??’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் கமல் ஹாசன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூடத்தை கூட்டி இருந்த கமல் ஹாசன், கடுமையாக மத்திய அரசையும் சாடினார். பிரதமர் நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமல்படுத்த முடியாதா? என்று கேட்டு இருந்தார்.

Leave a Response