தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஏமாற்றப்படுகிறார்களா?


ஒரு திரையரங்கு என்பது ஒருவர் இடம் வாங்கி அதை கட்டி முடித்தபிறகு, திரையரங்குக்கு ப்ரோஜக்டார் உட்பட அணைத்து தேவையான பொருட்களையும் பொருத்தவேண்டும். பின்னர் மத்திய திரைப்படத்துறை(Central Film Development Corporation – CDFC) அவர்களிடம் உரிமம் பெறவேண்டும். ப்ரொஜக்டர்கள் என்பது திரையரங்கு உரிமையாளர்கள் புதியதாக வாங்கினார்கள். திரையரங்குகளில் ‘பெர்மனென்ட்’ உரிமம், ‘செமி பெர்மனென்ட்’ உரிமம் என இருவகையாக இருந்தன. பெர்மனென்ட் உரிமம் பெற்ற திரையரங்குகள் முழுநேர திரையரங்குகளாக இருந்தன, அத்திரையரங்குகள் சொந்த ப்ரோஜக்டர்களை பொருத்தினர். செமி பெர்மனென்ட் உரிமம் பெற்ற திரையரங்குகள் டூரிங் டாக்கீஸ்(டெண்டு கொட்டகையாக) இருந்து வந்தன. டூரிங் டாக்கீஸ் பழைய ப்ரோஜக்டர்களை வாடகைக்கு எடுத்து டூரிங் டாக்கீஸில் பொருத்தி வந்தனர். அப்போது ப்ரோஜெக்டர்களை ‘போட்டோ போன்’ மற்றும் வேறு சில நிறுவனங்கள் ப்ரோஜெக்டர்களை வருடாந்திர பராமரிப்பு(Annual Maintenance) செய்து வந்தனர். அந்த ப்ரோஜெக்டர்களை அப்போது திரையரங்குகளில் நிறுவியத்தில் திரைப்பட கல்லுரி மாணவர்களின் பங்கு அதிகமாக இருந்தது. அந்த ப்ரோஜெக்டர்களை நிறுவிய மாணவர்களில் பஞ்சாபிகேசவன், ரவி என இன்னும் சில சவுண்ட் இன்ஜினியரிங் படித்தவர்கள் இருந்துள்ளனர்.

சுமார் 2000’ம் ஆண்டு காலகட்டத்தில் டிஜிட்டல் வழியாக திரைப்படங்களை வெளியிடும் தொழில்நுட்பம் இந்தியாவில் வர ஆரம்பித்தது. அப்போது எந்த வகையான டிஜிட்டல் பார்மட்டில் திரைப்படங்களை வெளியிடுவது என்ற சிக்கலும் இருந்தது. 2003’ம ஆண்டில் கியூப்(Qube) என்ற நிறுவனம் ‘ரியல் இமேஜ்’ செந்தில், இயக்குனர் ஜெயேந்திரா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மற்றும் சிலரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் பிலிமில் படம்பிடிக்கப்பட்ட திரைப்படங்கள் டிஜிட்டல் பார்மட்டில் மாற்றப்பட்டு கியூப் போன்ற டிஜிட்டல் ப்ரோஜெக்டர்களில் திரையிட ஆரம்பிக்கப்பட்டன. திரைப்பட பிலிம் ப்ரோஜெக்டர்கள் குறைவாக இருக்கும்போது, பல லட்சம் விலை உயர்ந்த டிஜிட்டல் ப்ரோஜெக்டர்கள் எப்படி திரையரங்குகளுக்கு சாத்தியப்படும் என்ற கேள்வி திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஒரு கேள்வி குறியாக இருந்து வந்தது. கியூப் நிறுவனத்திற்கும் திரைத்துறையில் காலுன்றி வெற்றிபெற வேண்டும் என்பது இலக்கு. அப்போது தான் அவர்கள் திரையரங்கு உரிமையாளர்களையும், தயாரிப்பளர்களையும் சந்தித்து அவர்களுக்கான ஆறுதல் பதிலை கொடுத்தார்கள். அது தான், “குறைந்த பணம் மட்டுமே தாருங்கள், நாங்கள் உங்களுக்கு ப்ரோஜெக்டர்களை நிறுவுகிறோம். ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் தயாரிப்பாளர்கள் வி.பி.எப்(Virtual Print Fee) கொடுக்கட்டும், திரையரங்கு உரிமையாளர்கள் குறைந்த தவணை கட்டட்டும், சுமார் 10 முதல் 15 வருடங்களில் தியரங்கு உரிமையாளர்களுக்கு சொந்தமாகிவிடும்.” என்று கூறியுள்ளனர். அப்போது தயாரிப்பாளர்களும் சிறு தொகை தானே என்றும், திரையரங்கு உரிமையாளர்கள் நமக்கு ப்ரொஜெக்டர் சுலுபா தவணையில் வருகிறதே என்று ஒரு கணக்கை போட்டனர். அந்த கணக்கு பிற்காலத்தில் தயாரிப்பாளர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் எமாற்றபோகிற கணக்கு என்று தெரியாமல் போனது தான் பிரச்சனை. தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கியுபின் அம்சங்களை பற்றியும் விளக்கியுள்ளனர் கியூப் நிருவாகத்தினர். டிஜிட்டல் ப்ரோஜெக்ஷனில் அவர்களுக்கென்று ஒரு ப்ரிதேக தொழில் நுட்பம்(Format) இருப்பாதாகவும் அந்த பார்மட் இவர்களுடைய ப்ரோஜெக்டர்களில் மட்டுமே தான் திரையிடமுடியும் என்று விளக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி கியூப் வாயிலாக திரையிடப்படும் எந்த ஒரு திரைப்படமும் திருட்டுதனமாக காப்பி செய் முடியாது என்றும், எவர்களுடைய திரையிடலை யார் எந்த கேமராவில் படம் பிடித்தாலும் அது எந்த திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்டது என்று சுளுபமாக கண்டுபிடிக்கும்படியாக வசதி படைத்தது என்று சொளியுள்ளனர். இதை கேட்ட அப்போதைய தயாரிப்பாளர்கள் தற்போது வீடியோ பைரசி அதிகமாக இருந்து வருகிறது, இந்த தொழில்நுட்பம் பக்கம் சாய்ந்தால் திரைத்துறை ஓஹோ என்று இருக்கும் என்று ஆசைப்பட்டனர், கியுபிடம் சிக்கி கொண்டனர். என்னடா இவர்களுக்கு சிக்கல் என்று பார்கிரீர்களா, திரையரங்குகளுக்கு கியூப் நிறுவனம் ப்ரோஜெக்டர்களை நிறுவும்போது ஒப்பந்த பத்திரம்(Contract Bond) ஒன்றை நீட்டி, உங்களுக்கு நாங்கள் கொடுத்திருக்கும் ப்ரோஜெக்டருக்கான ஒப்பந்தன் என்று சொல்லியுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களும் அதில் ஆங்கிலத்தில் பல் பக்கங்கள் இருந்ததினால் சரியாக படித்தும், படிக்காமலும் நீட்டிய இடங்களில் எல்லாம் கையொப்பமிட்டுள்ளனர். அதுதான் அவர்களாகவே அவர்களுக்கு வைத்து கொண்ட ஆப்பு. சரி இதில் தயாரிப்பாளர்களுக்கு என்ன பிரச்சனை என்று பார்கிரீர்களா, வி.பி.எவ்(VPF) கட்டணம் தான், திரையரங்கு உரிமையாளர்களுக்கு 1௦ – 15 வருடங்களுக்குள் சொந்தமாககூடிய ப்ரோஜெக்டர்களை இதே கியூப் நிறுவனம், இப்போது டெக்னாலஜி டெவலப் ஆகி அடுத்தக்கட்ட ப்ரோஜெக்டர்கள் வந்துள்ளன, உங்கள் பழைய ப்ரொஜெக்டரை நாங்களே ஒரு விலைக்கு எடுத்துகொண்டு உங்களுக்கு அட்வான்ஸ்ட் மாடல் புதிய ப்ரொஜெக்டர் கொடுக்குறோம் என்று திரையரங்கு உரிமையாளர்களை மூளை சலவை செய்து பழைய ஆக்ரீமெண்டை அடுத்த 10 – 15 ஆண்டு மீண்டும் ஒப்பந்தத்தை புதுபித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தினால் தயாரிப்பாளர்கள் கொடுத்து வந்த வி.பி.எப்(VPF) கட்டணத்தை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் கட்டி வரும் நிலை தொடர்ந்து வருகிறது.

பிலிம் ப்ரொஜெக்ஷன் இருக்கும்போது ஆடியான்ஸ்களின் பல்ஸை அறிந்து அந்த திரைப்பட விநியோகச்தரோ அல்லது திரையரங்கு உரிமையாளரோ தயாரிப்பாளரி தொடர்புகொண்டு ஒரு குறிப்பிட்ட பாடலையோ, காட்சியையோ சொல்லி நீக்கவேண்டும் என்பார்கள். அதற்கு தயாரிப்பாளரும் ஒப்பந்தம் கொடுக்க, அடுத்த காட்சியிலேயே திரையரங்கு ஆப்பரேட்டர் அந்த காட்சிகளை கத்திரி போட்டு நீக்கி விடுவார். இப்போதோ, ஒரு காட்சியையோ, பாடலையோ, வசனத்தையோ நீக்க வேண்டுமென்றால், தயாரிப்பாளர் கியூப் நிறுவனத்திற்கு லெட்டர் அல்லது மின்னஞ்சல் அனுப்பி அதற்க்கான ஒரு கட்டணத்தை செலுத்தி தான் செய்யவேண்டிய கட்டாயம் நிலவியுள்ளது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு காரணம் திரைத்துறையினருக்கு சம்பாதிக்கும் எண்ணம் இருந்த அளவுக்கு, நாம் நாளை சிக்கலில் இருக்கபோகிறோம் என்ற ஒரு சின்ன சந்தேகம் ஏற்படாமல் இருந்ததுதான் முக்கிய காரணம். சினிமா சங்கங்களும் கியூப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் போடும் ஒப்பந்தத்தை இதுநாள் வரை சரியாக ஆய்வு செய்யாததே காரணம். அப்பிடியும் ஒரு சில தயாரிப்பாளர்களோ அல்லது திரையரங்கு உரிமையாளர்களோ விவரமறிந்து கியூப் நிறுவனத்தை கேள்வி கேட்கும் போது அவர்களை அப்போதே அவர்களுக்கு சாதகமாக தள்ளுபடி கொடுப்பதும், சரிகட்டுவதும் கியூப் போன்ற மற்ற சில டிஜிட்டல் சர்விஸ் ப்ரோவைடர் நிறுவனங்களுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

தற்போது இளைஞர்கள், குறிப்பாக நன்கு படித்த பட்டதாரிகள் திரைப்படம் தயாரிப்பதினால் இந்த டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் பற்றி நன்கு ஆய்வு செய்ய ஆரம்பித்துவிட்டனர். அந்த இளம் தயாரிப்பாளர்கள் கியுப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் போட்டிருக்கும் ஒப்பந்தத்தை ஆய்வு செய்யவும் ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களின் ஆய்வு கியூபுக்கு ஆப்பாக வரும் என்று கியூப் போன்ற நிறுவனங்கள் எதிர்ப்பார்கவில்லை.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த வேளையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவரான விஷால் கியுபை எதிர்த்து குரல்கொடுக்க ஆரம்பித்தார். விஷால் மீது பல மூத்த தயாரிப்பாளர்களுக்கு கருத்து வேறுப்பாடு இருந்தாலும், கியூப் விவகாரத்தில் விஷால் எடுத்துள்ள முடிவில் அவர்கள் அனைவரும் தோல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். விஷாலுடன் கருத்து வேறுப்பாடு கொண்ட தயாரிப்பாளர்கள் தாணு, டி.சிவா, தேனப்பன் மற்றும் பலர் இந்த கியூப் விஷயத்தில் விஷாலுக்கு ஆதரவாக இருப்பதை கண்டு கியூப் நிறுவனம் சற்று ஆட்டம் கண்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

தற்போது நிலவிவரும் இந்த திரைத்துறையினரின் வேலைநிறுத்தத்தில் பெரிய பாதிப்பு என்பதைவிட நஷ்டம் என்று பார்த்தல் அது கியூப் மற்றும் பிற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு தான் முதலிடம், திரையரங்குகளுக்கு இரண்டாம் இடம், பிறகுதான் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கியூப் நிறுவனத்தில் மாத சம்பளம் பெரும் பணியாளர்கள் தான் அதிகம். அங்கு பணியாற்றுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15000 முதல் சில லட்சங்கள் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. திரையரங்கில் பணியாற்றுபவர்களுக்கு குறைந்த சம்பளமாக இருந்தாலும் பெரும்பாலோனருக்கு மாத சம்பளம் தானாம். ஆனால் அனைத்து தயாரிப்பாளர்களும் இப்போது படம் ஷூடிங்கிலோ அல்லது படம் வெளியிடுவதற்கு தயார் நிலையில் கிடையாது. தற்போது படத்தை தயாரித்து வெளியிடாமலும், ஷூட்டிங்கில் செட் போட்டுவிட்டு படப்பிடிப்பு செய்யாமல் இருப்பவர்களுக்கு தான் நஷ்டம், காரணம் அவர்கள் முதலீடு கோடிகளில் உள்ளது அதற்க்கான வட்டி தினம்தோறும் குடிகொண்டு இருக்கிறது. இந்த திரைத்துறை வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோர் கியூபுக்கு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர், சிலர் மட்டுமே இந்த வேலை நிறுத்தத்திற்கு விஷால் தான் காரணம் என அவர் மீது கடும் கோபத்திலும் உள்ளனர். இதற்க்கு ஒரு உதாரணம், அன்று கமல்ஹாசன் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ என்ற திரைப்படத்தை டிஜிபீட்டா என்னும் டிஜிட்டல் முறையில் பிலிம் இல்லாமல் படம் தயாரித்தபோது ஏளனமாக பேசியும் அந்த படம் வெற்றி பெறமுடியாமலும் செய்தனர். அதே தான் இன்று விஷாலின் நிலையம், இன்று விஷால் மீது கோபத்தில் இருப்பவர்கள் அவர்கள் பார்வையில் அவர்கள் சரி தான் காரணம் அவர்களுக்கு வட்டி ஏறிக்கொண்டு செல்கிறது என்று, ஆனால் விஷாலின் முயற்சி வெற்றி பெற்றால் அது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நிரந்தர நன்மைபயக்கும் என்பது தான் உண்மை.

அதேபோல், இதுவரை திரைப்படத்துறை இன்னும் ஒரு தொழிற்சாலையாக மத்திய அரசினால் அங்கிகரிக்கப்படவில்லை. திரைப்படத்துறையை தொழிற்சாலையாக அங்கீகரித்து, குறுந் தொழிற்சாலை(Tiny Industry), சிறிய அளவிலான தொழிற்சாலை(SSI), நடுத்தர அளவிலான தொழிற்சாலை(MSI) மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலை(LSI) என அங்கிகரிக்கும் விதமாக திரைதுரையினர் முயற்சி மேற்கொண்டு சாதிதார்கலானால் கண்டிப்பாக திரைத்துறைக்கு ஒரு பெருத்த விடிவுகாலமாக இருக்கும். சின்ன படமோம், பெரிய படமோ திரைத்துறையில் மட்டுமே அதிக அளவிலான வேலையாட்கள் பணியாற்றுகிறார்கள் என்பது நிதர்சன உண்மை. அப்படிப்பட்ட ஒரு தொழிலை மத்திய அரசு ஒரு தொழிற்சாலையாக அங்கீகரித்தால், வங்கி கடன், தொழிற்சங்க சலுகைகள் போன்ற பயனுள்ளவைகள் கிடைக்க வாய்புகள் அதிகமுள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து திரைப்படத்துறை சங்கங்களும் முயற்சித்தால் இதற்க்கான பலன் ஒருநாள் கிடைக்க கண்டிப்பாக வாய்ப்பு இருக்கும்.

இந்த கட்டுரை மூலமாக நாம் கணிப்பது “கியூப் போன்ற ஒரு ஒரு சில டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்களால் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஏமாற்றபடுகிறார்கள்” என்பது தான்.

இந்த கட்டுரையில் அன்றைய பிலிம் சினிமாவை பற்றியும், தற்போதைய டிஜிட்டல் சினிமாவை பற்றியும் தகவல்கள் கொடுத்து உதவியவர், எம்.எம்.மதியழகன், முன்னால் மண்டல அலுவலர்(சென்னை), மத்திய திரைப்பட தணிக்கை குழு, தற்போது இயக்குனர், பிலிம் சீரிஸ், மத்திய பிலிம்ஸ் டிவிஷன் கார்பரேஷன்.

Leave a Response