பாகிஸ்தான் பட விழாவில் பாகுபலி..!

தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெளியாகி மிகப்பெரிய வசூலைக்குவித்தது.

‘பாகுபலி’ படம் விரைவில் பாகிஸ்தானில் நடைபெறும் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் செல்லவிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி.

இது குறித்து ட்வீட்டரில் தகவலை வெளியிட்டிருக்கிறார் ராஜமௌலி.

”பாகுபலி’ திரைப்படம் வெளியாகி ஏற்கனவே எனக்கு பல வெளிநாடுகளுக்கு செல்லும் அற்புதமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது ‘பாகுபலி’, பாகிஸ்தான் – கராச்சியில் நடைபெறும் திரைப்பட விழாவிலும் திரையிடப்படுகிறது. அதன் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் நாட்டுக்கும் செல்லவிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர்,. ராம் சரண் இருவரையும் வைத்து புதியபடத்தை இயக்குகிறார் ராஜமௌலி.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் சென்று வர திட்டமிட்டுள்ளார் எஸ்.எஸ்.ராஜமௌலி.

Leave a Response