ராஜமௌலியின் அடுத்த பட தலைப்பு இதோ..!

‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய மெகா ஹிட் படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் என்ன என்பதே ரசிகரக்ள் மற்றும் திரையுலகினரின் கேள்வியாக இருந்தது. ‘பாகுபலி-2’ படத்தை தொடர்ந்து ராஜமௌலி ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண்தேஜா இருவரையும் இயக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் துவக்க விழா நேற்று பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கு சினிமாவின் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி கலந்துகொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ராஜமௌலி, ராம்சரண் தேஜா, ராமராவ் ஆகிய பெயர்கள் ‘R’ எழுத்தில் துவங்குவதால இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘RRR’ என்று பெயர் வைத்துள்ளனர். தனய்யா தயாரிக்கும் இந்த படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறாது. 11-வது மாதத்தில் 11-ஆம் தேதி 11.11 மணிக்கு படம் துவங்கப்படும் என்று இயக்குனர் ராஜமௌலி ட்விட்டரில் பதிவு செய்து படத்தின் தற்காலிக பெயர் ‘RRR’ என்றும் அறிவித்திருந்தார்.

அதன்படி இப்படத்தின் துவக்க விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்க இருக்கும் நடிகர் நடிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Leave a Response