பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தற்போது பிஸியாகி விட்டனர். இதில் கவிஞர் சினேகன் “பனங்காட்டு நரி” என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஹீரோயினாக ஓவியா கமிட் ஆகி உள்ளாராம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் ஓவியா. இவருக்கு என்று ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டார்கள் இணையத்தில்.
இந்நிலையில் சினேகன் “பனங்காட்டு நரி” என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவை அணுகி உள்ளனர். இதற்கு அவரும் சம்மதித்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.