ஆரஞ்சு நிறத்தில் படர்ந்திருந்த பனி : வியப்பில் கிழக்கு ஐரோப்பா மக்கள் !

கிழக்கு ஐரோப்பா மக்களை வியப்பில் ஆழ்த்திய ‘ஆரஞ்சு’ நிறத்து பனி.

ரஷ்யா, பல்கேரியா, உக்ரைன், ரொமானியா மற்றும் மால்டோவா போன்ற நாடுகளில் படர்ந்திருந்த லேசான ஆரஞ்சு நிறம் நிறைந்த பனியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

சஹாரா பாலைவனத்தில் வீசும் மண் புயலானது, பனி மற்றும் மழையுடன் கலந்துள்ளதால் இந்த நிறத்தில் பனி படர்ந்திருக்கிறது என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் என்றாலும், இந்த முறை வழக்கமாக கலக்கும் மண்ணின் அளவை விட இது அதிகமாகும்.

ரஷ்ய நகரான சோச்சிக்கு அருகில் உள்ள பனிச்சருக்கு விளையாட்டு திடலில் இருந்த பலரும், இந்த அசாதாரண சூழலை படம் பிடித்து அனுப்பினர்.

Leave a Response